எழில் பெறுமா எலிமியான் கோட்டூர் சிவன் கோவில்?
செல்லம்பட்டிடை: கடந்த பத்தாண்டுகளாக பூஜைகள் நிறுத்தப்பட்ட, எலிமியான் கோட்டூர் சிவன் கோவிலில் தொடர்ந்து பூஜைகள் செய்ய, இந்து அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், செல்லம்பட்டிடை ஊராட்சி, எலிமியான் கோட்டூர் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான தெய்வநாயகேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பதரால் பாடப் பெற்ற இக்கோவில் குரு பரிகார தலமாக உள்ளது. இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சின்முத்திரை நிலையில் இருப்பது வேறு எங்கும் காண முடியாது. பல பகுதிகளில் இருந்தும், இங்கு பக்தர்கள் வழிபடுகின்றனர். தர்மகர்த்தா பராமரிப்பில் இருந்த இக்கோவில், கடந்த, பத்தாண்டுகளுக்கு முன் திரு த்தணி, சுப்பிரமணியசுவாமி கோவிலின் உபகோவிலாக இணைக்கப்பட்டது. அதன்பின் குருக்கள், கவாலாளி அமைக்கப்படாமல் கோவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கோவில் எந்த நேரமும் பூட்டியே கிடக்கிறது. வௌியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய் யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, இந்த கோவிலில் பூஜைகளை மேற்கொள்ள, இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கோவிலில், பத்தாண்டுகளாக குருக்கள் இல்லை. ஆறு கால பூஜைகள் செய்யப்பட்ட இந்த ÷ காவிலில், இப்போது ஒரு கால பூஜைக்கு வேண்டிய பூஜை பொருட்களை கூட இந்து அறநிலையத்துறை வழங்காமல் உள்ளது.