குளக்கரையில் கிடந்த சுவாமி சிலைகள்!
ADDED :3414 days ago
கடலுார்: குளக்கரையில், சுவாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. கடலுார் அடுத்த தியாவல்லி கன்னிக்கோவில் குளக்கரை அருகே உள்ள புதரில் அம்மன், தட்சணாமூர்த்தி, பெருமாள் ஆகிய கற்சிலைகள் கேட்பாரற்று கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலு வலர் லட்சுமியிடம் தகவல் தெரிவித்தனர். அவர், மூன்று சிலைகளையும் கைப்பற்றி, கடலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் அன்பழகனிடம் நேற்று ஒப்படைத்தார். இந்த சிலைகளை, கடலுாரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று சிலைகளும் சேதம் அடைந்திருப்பதால், குளக்கரையில் வைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.