உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழாவுக்கு தயாராகும் ஈரோடு

ஆடிப்பெருக்கு விழாவுக்கு தயாராகும் ஈரோடு

ஈரோடு: ஆடிப் பெருக்கு விழாவுக்காக ஈரோடு மாநகரம் தயாராகி வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று, தீரன் சின்னமலை நினைவுநாள், அரச்சலூர் அருகே உள்ள ஒடாநிலையில் அரசு விழாவாக, கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு உள்ள நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இன்னும் சில நாட்களில், (ஜூலை 16) ஆடி மாதம் பிறப்பதையொட்டி, ஆடி பெருக்கு விழாவுக்கு ஈரோடு மாநகரம் இப்போதே தயாராகி வருகிறது. குறிப்பாக சாலையோரம் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், சென்டர் மீடியன் பகுதிகளில், கருப்பு, வெள்ளை வண்ணம் பூசும் பணி ஆரம்பமானது. சாலை ஆய்வாளர்கள், ஏழு பேர் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !