கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்
ADDED :3412 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவில், ஆனி மாத தேரோட்ட விழா உற்சவம் துவங்கியது. கடந்த 12ம் தேதி மாலை முத்துமாரியம்மன் சனிபகவானுக்கு முத்து அளித்து, விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. நாளை காப்புக்கட்டுதல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 27ம் தேதி மாரியம்மன் தேரோட்டம் நடக்கிறது. கோவில் அறங்காவலர் நற்குணம் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.