உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா!

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா!

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை,  தேர் திருவிழா நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமைவாய்ந்த  அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், கடந்த 8ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து 7வது நாள் வீதியுலாவை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரர்  சுவாமிக்கும், திருமுத்தாம்பிகை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.  இதையடுத்து அன்னதானமும், திருமண கோலத்தில்  சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. இன்று மாலை, சம்ஹார உற்சவம் நடக்கிறது.  நாளை மதியம் 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !