ஊத்துக்கோட்டை தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :3406 days ago
ஊத்துக்கோட்டை: வியாழக்கிழமையை ஒட்டி, தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சுருட்டப்பள்ளி, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், வளாகத்தில் உள்ளது தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சுவாமி. தம்பதி சமேதராய் காட்சியளிக்கும் இவருக்கு, நேற்று, வியாழக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.