உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விட்டல் ரகுமாயி (பாண்டுரங்க ருக்மணி) கோவில் பிரம்மோற்சவ விழா

விட்டல் ரகுமாயி (பாண்டுரங்க ருக்மணி) கோவில் பிரம்மோற்சவ விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில், விநாயகர், விட்டல் ரகுமாயி (பாண்டுரங்க ருக்மணி) கோவில் மற்றும் மாதா ஸ்ரீ அம்பா பவானி கோவிலில், இன்று (ஜூலை, 15) முதல் வரும், 21 ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா மற்றும் அகண்ட நாம பஜனை நடக்கிறது. விழாவையொட்டி இன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேக ஆராதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு, 7 மணிக்கு, விட்டல் ரகுமாயி உற்சவமூர்த்தி ஊர்வலமும், நாளை (ஜூலை, 16) காலை, 10 மணிக்கு, விநாயகர், விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேக பூஜை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, 19ம் தேதி இரவு, 10 மணிக்கு, கோபால காலா பண்டரி பஜனையும், 20ம் தேதி காலை, 10 மணிக்கு, விட்டல் ரகுமாயி திருக்கல்யாணமும், மாலை, 5 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் திருத்தேர் உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !