உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆடி முதல் ஞாயிறு பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆடி முதல் ஞாயிறு பூஜை

நாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை, 9 மணிக்கு சுவாமிக்கு வடமாலை சாற்றப்பட்டது. காலை, 10 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னதாக, ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !