அம்மன் கோவில்களில் திருவிழா வீதிகளில் வறட்டி விற்பனை!
காஞ்சிபுரம்: ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மனுக்கு பொங்கலிடுதல், கூழ்வார்த்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். அதற்காக, வறட்டி தேவை ஏற்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் நகரின் அம்மன் கோவில்கள் அருகே, வறட்டி விற்கப்படுவதை பார்க்க முடிகிறது. தாராள பொருளாதாரமயம், இயந்திரமயம், கம்ப்யூட்டர்மயமாக உலகம் மாறினாலும், இறை பக்தியும், தெய்வ வழிபாடும், அதற்கான செயல்களும் இன்னமும் பழமை மாறாமல் இருப்பதை, வறட்டி விற்பனை எடுத்துக் காட்டுகிறது. எல்லா நாட்களிலும் வறட்டி விற்பனை செய்ய மாட்டோம்; ஆடி மாதம் மட்டும். வெளியூர்களில் இருந்து பொங்கலிட வருபவர்கள், வறட்டிகளை வாங்குவர். அரக்கோணத்திலிருந்து மொத்தமாக வாங்கி, இங்கு விற்பனை செய்கிறோம். ஒரு வறட்டி, இரண்டு ரூபாய். மழை காலத்தில் பாதுகாக்க வேண்டும் அல்லது அனைத்தும் வீணாகி விடும். சரோஜாம்மாள், வெள்ளகுளம்