உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை

வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை

கீழக்கரை: கீழக்கரை தட்டார்தெரு உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளி பாடினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

*திருவாடானை அருகே உப்புக்கோட்டை கிராமத்தில் கருப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடியில் திருவிழா நடப்பது வழக்கம். இதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்த திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தாசில்தார் சுகுமாறன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இருதரப்பினரும் இணைந்து சாமி கும்பிடுவது என, வலியுறுத்தப்பட்டது. இதை இரு தரப்பும் ஏற்கவில்லை. தனித்தனியாக திருவிழா நடத்தி சாமி கும்பிடுவதாக தெரிவித்தனர். இதை வருவாய்த்துறையினர் ஏற்றுக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !