காஞ்சி வரதராஜர் வடக்கு மாட வீதி சுற்றுச்சுவரை பாதுகாப்போம்!
காஞ்சிபுரம்: இப்படி ஒரு சுற்றுச்சுவர் இந்த காலத்தில் கட்ட முடியுமா என, பொறியாளர்களே வியக்கும் அளவுக்கு வானளாவ உயர்ந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுச்சுவரின் கம்பீரம், பார்ப்போரை அதிசயிக்க செய்கிறது என்றால் மிகையில்லை.வரதராஜ பெருமாள் கோவிலின் பெருமை, அதன் அற்புதத்திற்கு அடையாளமாக விளங்கும் சுற்றுச்சுவரின் வடக்கு மாட வீதியை ஒட்டியவாறு, நிமிடத்திற்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், இருபுறமும் வேகமாக செல்கின்றன. இதனால் ஏற்படும் அதிர்வால், சுற்றுச்சுவர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதுபோல, வாகனங்கள் மோதினாலும், சுற்றுச்சுவர் பாதிப்படையலாம். எனவே, சுற்றுச்சுவரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்காக அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்த தேவையில்லை. மாறாக, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், சுற்றுச்சுவர் பாதுகாக்கப்படும்.
சுற்றுச்சுவரிலிருந்து, 3 அடி தள்ளி, சாலையில், 1 மீட்டருக்கு, சிமென்ட் கான்கிரீட் தடுப்பு அமைக்கலாம். இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள், எந்தச் சூழ்நிலையிலும், சுற்றுச்சுவர் மீது மோத வாய்ப்பு இல்லாமல் போகும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று முந்திச் செல்ல அனுமதி மறுக்க வேண்டும் சாலையில் வேகத்தடைகள் அமைத்து, கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டி, வாகனங்கள் வேகமாக செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பகுதியில், போக்குவரத்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.