உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் சிரமம்

காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் சிரமம்

போடி: போடி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் பக்தர்கள் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். போடி மயான ரோட்டின் இடது புறம் ஆற்றுப்பகுதியில் பழமையான காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகின்றன. சித்திரை முதல் தேதியில் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஏராளமான பக்தர்கள் வந்து சிவனை தரிசித்து செல்கின்றனர். ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு பெண்கள் ஆற்றில் ஊற்று தோண்டி மாவினால் அம்மன் சிலை செய்து சுமங்கலி பூஜை செய்வர். ஏராளான பக்தர்கள் வரும் கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் தனியார்கள் ஆக்கிரமித்துள்ளனர். பாதை வசதி இருந்தும் ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளன. மின்கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இதனால் பக்தர்கள் செல்ல சிரமம் அடைகின்றனர். கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு வசதி செய்து தர நகராட்சியிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஆடி 18 ம் பெருக்கு விஷேச திருவிழா வரக்கூடிய நிலையில் பக்தர்கள் நடந்து செல்ல பாதையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு வசதி செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !