சித்தலூர் கோவிலில் ஆடிமாத சிறப்பு பூஜை
ADDED :3369 days ago
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிமாத சிறப்பு பூஜைகள் துவங்கியது. தியாகதுருகம் அடுத்த பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதன் முதல் தேதியில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கருவறை புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு தீபமேற்றி, வழிபாடு நடத்தினர். இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.