குரு பூர்ணிமா வியாசர் விழா
திருவள்ளூர்: திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், குரு பூர்ணிமா வியாசர் விழாவை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் ஆனந்த சாய்ராம் தியான கூடம் உள்ளது. குரு பூர்ணிமா மற்றும் ஆறாம் ஆண்டு தொடக்க சம்வஸ்த்ர அபிஷேக விழா, இங்கு துவங்கியது. நேற்று காலை, நடைபெற்ற சிறப்பு பாலாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் கைகளால் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். காலை 8:30 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், காலை 10:00 மணிக்கு, துணி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் துணியில் மட்டைத் தேங்காய், நெல்பொரி, நெய், தேன், சாம்பிராணி கற்பூரம் மற்றும் நவதானியம் சமர்ப்பித்தனர்.இரவு 7:15 மணிக்கு, சாயிநாதர் சிறப்பு பஜனைகள் நடைபெற்றன. சம்வஸ்த்ர அபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (19ம் தேதி) காலை 10:30 மணிக்கு, சங்காபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, சாயி சத்ய, நாராயண பூஜையும், இரவு 7:30 மணிக்கு, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனியும் நடைபெறும்.