பூட்டை தேர்த் திருவிழா வரும் 22ம் தேதி துவக்கம்
ADDED :3368 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 22ம் தேதி துவங்குகிறது. சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் 22ம் தேதி துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து 22ம் தேதி ஊரணி பொங்கல், இரவு அம்மன் முத்து பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் தேரோட்டம் நடக்கிறது. பாலபட்டு ஜாகீர் முத்துசாமி தேர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். தேர் திருவிழாவில், சங்கராபுரம் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.