உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உற்சவ திருமேனிகள் பாதுகாப்பு மையம் திறப்பு

உற்சவ திருமேனிகள் பாதுகாப்பு மையம் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், உற்சவ திருமேனிகள் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டது. திருச்செங்கோடு மலைக்காவலர் கோவில் வளாகத்தில், 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உற்சவ திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி பார்வையிட்டார். இதில், 300 சிலைகள் வைக்க கூடிய வகையிலான கண்ணாடி கூண்டுகள், பகல் மற்றும் இரவு காவலர்கள், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய, சிசிடிவி கேமராக்கள், அபாய சங்கு மற்றும் லாக்கர் கதவு என முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சேலம், நாமக்கல் மண்டல கட்டட செயற்பொறியாளர் ரங்கசாமி, அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சூரியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !