உலகங்காத்தான் கிராமத்தில் மாரியம்மன் தேர் திருவிழா
ADDED :5134 days ago
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள மாரியம்மன், கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி செல்லியம்மனுக்கும், 3ம் தேதி கூத்தாண்டவருக்கும் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணம், ஊரணி பொங்கல், சனிமூலை சாமி உற்சவம், பம்பை கழு மரம் ஏறுதல் உள்ளிட்டவை நடந்தது.நேற்று காலை 11 மணிக்கு காளி கோட்டை இடித்தல், தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது.