உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோருக்கு பாத பூஜை குழந்தைகளுக்கு "அட்சதை

பெற்றோருக்கு பாத பூஜை குழந்தைகளுக்கு "அட்சதை

திருப்பூர்: குரு பூர்ணிமாவை ஒட்டி, அமிர்தா வித்யாலயம் பள்ளியில், பெற்றோருக்கு, குழந்தைகள் பாத பூஜை செய்து வழிபட்டனர். வேத வியாசரின் பிறந்த நாளான ஆடி மாத பௌர்ணமி, குரு பூர்ணிமா விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மங்கலம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில், பெற்றோருக்கு குழந்தைகள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோரின் பாதங்களை கழுவி, மலர்களால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி, குழந்தைகள் வணங்கினர். பெற்றோர் ஆசி வழங்கி, இனிப்பு ஊட்டினர். விழாவில், சேகர் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்., மாநில மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஸ்ரீராம் பங்கேற்று பேசினார். பள்ளி முதல்வர் முரளிதரன், விழா ஏற்பாடுகளை செய்தார். மீனா குமாரி நன்றி கூறினார். வித்யா மந்திர் பள்ளியிலும், குருபூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயந்தி மாலா, செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். 10, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர், தங்கள் ஆசிரியரின் பாதங்களுக்கு மலர் தூவி, வணங்கி குரு வணக்கம் செலுத்தினர். குரு பக்தி, குருவின் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் விவரித்தனர். பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !