உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித புதுமை அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

புனித புதுமை அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

புதுச்சேரி: உருளையன்பேட்டை புனித புதுமை அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றதுடன் நேற்று துவங்கியது.  இதனையொட்டி, மாலை 6:30 மணிக்கு கூட்டுப்பாடற் திருப்பலி நடந்தது. தொடர்ந்து, கடலுார் மறைமாவட்ட முதன்மை குரு  அருளானந்தம்,  பேராயர் இல்ல ஆவண காப்பாளர் மெல்கிசதேக், நெல்லித்தோப்பு பங்கு தந்தை குழந்தைசாமி ஆகியோர் ஆண்டு  விழாவை கொடியேற்றி துவக்கி வைத்தனர். தினமும் காலை 6:30 மணிக்கு புனிதரின் 13 மன்றாட்டுகளும், மாலை 6:30 மணிக்கு  ஜெபமாலையும், அருட்தந்தையர்களின் மறையுரையும் நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு பாடற் கூட்டுத்  திருப்பலியும், மதியம் 11:30 மணிக்கு சிறப்பு ஜெப வழிபாடு, மாலை 6:30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !