கவுமாரியம்மன் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :3367 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருவிழாக்களில், பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவும் ஒன்றாகும். அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயில் ஆனித்திருவிழா ஜூலை 11ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருக்கண் அபிஷேகத்தில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன் சிங்கம், குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கியத் திருவிழாவான நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.