கிருஷ்ணன் கோவிலில் 18 பாஷாண சிலைகள் தைப்பூசத்தில் பிரதிஷ்டை
ராஜபாளையம்: கிருஷ்ணன்கோவிலில் 18 பாஷாண சிலைகள் தைப்பூச தினத்தின்று பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ராஜபாளையம் மாடசாமி கோயில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட நவபாஷண சிலைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகேஸ்வரன் தெரிவித்ததாவது: கிருஷ்ணன்கோவிலில் காயத்ரி தியானபீடம் உள்ளது. இங்கு அபூர்வ ருத்ராட்ச மரம், 13 இதழ்கொண்ட வில்வமரம் உள்ளன. இங்கு தை பூசத்தில் நிறுவ 18 பாஷாணத்திலான இரு ராஜஅலங்கார முருகன், விநாயகர், சிவன், ஐயப்பன், ஆஞ்சநேயர், மீனாட்சி, வெங்கடாஜலபதி, மகாலட்சுமி சிலைகள் சிலைகள் அமைத்துள்ளோம். பணி முடிந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சிலைகளை தற்போது நிறுவவில்லை. சிலைகளை 18 பாஷாணம், 18 மூலிகைகள், 16 பஸ்பங்கள் கங்கை உட்பட தீர்த்தங்கள், பஞ்சகவ்யம், நால்வகை மண் சேர்த்து மூன்று சிறுவர்கள் மற்றும் போகர் வழிகாட்டுதல்படி வடிவமைத்தோம். ஆறு ஆண்டு முயற்சியில் செய்தோம். சுவாமி சிலைகளை தரிசனம் செய்ய விரும்புவோர், ராஜபாளையத்தில் தினமும் காலை, மாலை 6 மணி முதல் 8 வரை வரலாம், என்றார். தொடர்புக்கு 98424 09306 என்ற அலைபேசி எண்ணில் பேசலாம்.