உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்!

கருப்பராயன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்!

அன்னுார்: குன்னியூர் கருப்பராயன் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் அருகே உள்ள குப்பனுார்  ஊராட்சி, குன்னியூர் கைகாட்டியில், கருப்பராயசாமி கோவில் உள்ளது. இக்கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த  ஆண்டு, கருப்பராயருக்கும், செல்வ விநாயகருக்கும் தேர்கள் செய்யப்பட்டன. இரண்டாம் ஆண்டு தேர்த்திருவிழா, 18ல் விநாயகர் வழிபாடுடன்  துவங்கியது. 19ல் அபிஷேக பூஜை நடந்தது. இரவு 8:35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கலாமணி சுவாமி தலைமையில் பூசாரிகளும்,  பக்தர்களும் வடம் பிடித்து  தேர் இழுத்தனர். கோவிலை சுற்றி வந்து, சிறுமுகை ரோடு விநாயகர் கோவில் சென்ற தேர் இரவு 10:45 மணிக்கு   நிலையை அடைந்தது.  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக விநாயகர் தேரும், அதற்கு அடுத்து கருப்பராயர் தேரும் சென்றன. ஜமாப் இசை  இசைக்கப்பட்டது. நேற்று காலை பால் அபிஷேகம், பொங்கல் வைத்தல், முடி எடுத்தல் நடந்தது. மதியம் கருப்பராயன் சுவாமியை அழைத்து வரு தல், சுவாமி திருவிளையாடல் நடந்தது. தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து, கருப்பராயன் கோவிலுக்கு, இலவச வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !