வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :3575 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி பூஜையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண் ருட்டி, திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதனையொட்டி அன்று மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதி வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.