கள்ளக்குறிச்சியில் முத்து மாரியம்மன் திருவீதியுலா உற்சவம்
ADDED :3368 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முத்து மாரியம்மன் திருவீதியுலா உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி சுவாமியின் திருவீதியுலா உற்சவம், 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. வரும் 23ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருகல்யாணம் நடக்கிறது. அம்பிகையின் அவதார மகிமைகளை விளக்கி ஒவ்வொரு நாளும் முத்து மாரிய ம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, இரவில் வீதியுலா உற்சவம் நடந்து வருகிறது. தொடர்ந்து 27ம் தேதி, முத்துமாரியம்மனின் தேர்த் திருவிழா நடக்கிறது.