ராமேஸ்வரம் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3369 days ago
ராமேஸ்வரம்: குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராமேஸ்வரம் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. மலர்களால் அலங்கரித்த தேரில் சாய்பாபா உருவ படத்துடன் பக்தர்கள் வீதி உலா வந்தனர். தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.