வீரட்டானேஸ்வரர் கோவிலில் சக்தி களதீப வழிபாடு நிகழ்ச்சி
ADDED :3372 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்ரர் கோவிலில் உலக நண்மைக்காக‚ சக்தி களதீப வழிபாடு நடந்தது. உலக நன்மை வேண்டி, அட்ட வீரட்டானங்களில் சக்திகள தீப வழிபாடு நடத்த காரைக்குடி அகத்தியர் இல்லம் சார்பில்‚ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வீரட்டான தளமான திருக்கோவிலுார் கீழையூரில்‚ நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு சக்திகள தீபவழிபாடு நடந்தது. அகத்தியர் திருமகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்‚ கோவில் வளாகத்தில் ஒருமுக விளக்கில் துவங்கி‚ 108 முக விளக்குகள் வரை பஞ்சபூத தேவர்கள்‚ நாயன்மார்கள்‚ பைரவர்கள்‚ சித்தர்களின் பெயரால் மொத்தம் இரண்டாயிரத்து 16 திரிகளை கொண்டு விளக்குகள் ஏற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் பக்தர்கள்‚ கோவில் சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர்.