திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனிக்கிழமை தரிசனம்
திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக சனிக்கிழமை தரிசனத்திற்காக திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
ஆடி சனிக்கிழமையையொட்டி திருநள்ளாரில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி சனிபகவானை வழிப்பட்டனர். கோவில் நிர்வகம் சார்பில் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க 50 ரூபாய் கட்டணம் தரிசனம், தர்ம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அதிகாலை 4 மணிக்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பாதுகாப்புக்காக போலீஸ்சார் பல்வேறு இடங்களில் கண்கணிக்கப்பட்டனர். மேலும் புறவழிச்சாலை, பஸ் நிறுத்தும் இடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டனர்.