வனபத்ரகாளியம்மன் ஆடி குண்டம் விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 30 சிறப்பு பஸ்கள் இன்று மதியம் முதல் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் பெருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகுவிமர்ைசயாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு, கோவை, நீலகிரி, திருப்பூர், சத்தியமங்கலம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாளை காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. எனவே, இன்று மாலை முதலே கூட்டம் அலைமோதும் என்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து, 15 மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து, 15 என மொத்தம், 30 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலம் சார்பில் இன்று மதியம் முதல் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் (வணிகம்) ரவிலட்சுமணன் கூறுகையில், கோவையில் உக்கடம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களிலிருந்து, 15 பஸ்கள் மற்றும் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், 15 பஸ்கள் என, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை(இன்று) மதியம் முதலே பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்கள் இயங்கவுள்ளன. மக்களின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், என்றார்.