வைராக்யம் என்றால் என்ன? சொற்பொழிவில் விளக்கம்
திருப்பூர் : ""வைராக்யம் என்பதற்கு உதாரணம் பிரகலாதன். எனவே, வாழ்க்கையில், வைராக்கியமாய் இருக்க, நரசிம்ம மூர்த்தியை வழிபடுங்கள், என, தேசமங்கையற்கரசி பேசினார். அவிநாசி, ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில், பக்தி தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. "முக்தி இன்பம் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் மங்கையற் கரசி பேசியதாவது: ஞானம் அடைந்தவர்கள், முக்தியடைய விரும்புகின்றனர். மனிதர் களுக்கு முதலில், பக்தி வர வேண்டும். அதன் நிறைவாய் எதிர்பார்ப்பது முக்தி. அவரவர் வினைகளுக்கேற்ப முக்தி கிடைக்கிறது. தனது பக்தனை காப்பதற்காக, அசுரனை அழிப்பதற்கு நாராயணன், பூலோகத்தில் அவதாரம் எடுத்த வரலாறு. இரண்யனுக்கு மகனாக பிறந்தவன் பிரகலாதன்; தாயின் கருவறையில் இருக்கும் போதே, நாரா யண நாமம் கேட்டு வளர்ந்தவன். அணுவில் உருவான கரு, சிசுவாகி பிறப்பது பெரிய அற்புதம்; இறைவன் படைத்த அதிசயம்.
நாராயண நாமம் கேட்டு கருவில் வளர்ந்த பிரகலாதன், பிறந்த பின் பும், நாராயணா நாமம் சொல்லி வளர்ந்தான். எந்த சூழலிலும், தன் தந்தையின் புகழ் பாடாமல், நாராயணன் புகழ் பாடியதால், தந்தை இரண்யனின் கோபத் துக்கு ஆளானான். விஷம் புகட்டப்பட்டது. பாற்கடலில், கல்லை கட்டி விடப்பட்டான். ஆனால், அத்தனை துன்பங்களில் இருந்தும், நாராயணன் நாமம் பாடியதால் பிரகலாதன், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தான். எந்த துன்பத்திலும் அவனுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. "பெருமாள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், என, பிரகலாதன் கூறுகிறான். தன் பக்தனை காக்க, நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த பெருமாள், தூணை பிளந்துகொண்டு வெளியே வந்து, இரண்யனை வதம் செய்து கொல்கிறார். வாழ்க்கையில், வைராக்கி யமாக இருக்க நினைப்பவர்கள், எதையும் இன்றே நடத்தி முடிக்க வேண்டும் என, ஆசைப்படுபவர்கள், நரசிம்ம மூர்த்தியை வழிபடுங்கள். இவ்வாறு தேச மங்கையற்கரசி பேசினார்.