உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு, சென்னை சில்க்ஸ் உரிமையாளர், 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார். திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, நேற்று முன்தினம் வந்த, சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மாணிக்கம், ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு, 50 லட்சம் ரூபாயை, நன்கொடையாக அளித்தார். இதற்கான வரைவோலையை, அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் தரிசன ஏற்பாடுகள் செய்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, சிறப்பு பிரசாதமும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !