உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளையத்தம்மன் கோவிலில் 26ம் ஆண்டு தீமிதி திருவிழா

பாளையத்தம்மன் கோவிலில் 26ம் ஆண்டு தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை;பாளையத்தம்மன் கோவிலில் நடந்த, 26ம் ஆண்டு தீமிதி திருவிழாவில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி தீமிதித்தனர்.பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது பாளையத்தம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 22ம் தேதி, காலை, 9:00 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து, 108 பெண்கள் பால்குடமும், அம்மனுக்கு சீர்வரிசையும் எடுத்து சென்றனர். விழாவின் இறுதி நாளான, நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழாவிற்கான காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், காலை, 7:30 மணிக்கு கரக ஊர்வலமும் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், மதியம், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, 9:00 மணிக்கு, திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !