வேர்க்காடு சந்தியாகப்பர் சர்ச் விழா மும்மதத்தினர் பங்கேற்பு!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் சர்ச் விழாவில், மும்மதத்தினர் பங்கேற்றனர். தங்கச்சிமடத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய 474ம் ஆண்டு விழா, ஜூலை 16ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நற்கருணை, ஜெபமாலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, திருவிழா திருப்பலி பூஜை நடந்தது. திருநெல்வேலி மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமை வகித்தார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட பாதிரியார்கள், இறைமக்கள், மும்மதத்தினர் உட்பட ஏராளமான பேர் பங்கேற்று அருளாசி பெற்றனர். அன்றிரவு அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்று திருவிழா நிறைவு திருப்பலி பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழு தலைவர் அந்தோணிராஜ், தண்ணீர் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா, அக்காள்மடம், செம்மமடம், ஓலைக்குடா, வேர்க்கோடு சேர்ந்த பட்டங்கட்டி கடையர் பேரவை மற்றும் இளைஞர் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.