அய்யப்பன் கோவிலில் நிலவு கால் சிறப்பு பூஜை
ADDED :5134 days ago
அவிநாசி : அவிநாசி அருகே அய்யப்பன் கோவிலில் நிலவு கால் அமைக்க சிறப்பு பூஜை நடந்தது. அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ஆகாசராயர் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கட்டப்படுகிறது. கல்கார திருப்பணியாக நடக்கும் கட்டுமான பணியில் நேற்று நிலவு கால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, அய்யப்பன் சன்னதி கட்டப்படும் இடத்தில் இருபுறமும் நிலவு கால் வைக்கப்பட்டது. புனித நீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைக்கு பின், நிலவு கால் நடப்பட்டது.ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியம், செயலாளர் சண்முகம், பொருளாளர் வெள்ளியங்கரி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த சிவக்குமாரசிவம், ஆருத்ர கபாலீஸ்வரசிவம் ஆகியோர் பூஜைகளை நடத்தினர்.