உத்தரகோசமங்கை வராஹியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
ADDED :3401 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை வராஹியம்மன் கோயிலில், கிருஷ்ண பஞ்சமியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் வராஹியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வளைகாப்பு நடந்தது. திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் நாகராஜன், உபயதாரர் ஆடிட்டர் முருகன், வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். அர்ச்சகர் மங்களபட்டர் தலைமையில் குமார் பட்டர், சேதுராஜன் பட்டர், வேல்முருகன் பட்டர் ஆகியோர் சிறப்பு பூஜை மற்றும் வளைகாப்பு வைபவத்தை நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் பவுர்ணமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.