திருவாடானை அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா
ADDED :3402 days ago
திருவாடானை: திருவாடானை அருகில் உள்ள அம்மன்கோயில்களில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. கருங்கவயல், ஆதியூர், சேமனிவயல், நத்தக்கோட்டை, திருவாடானை, சிநேகவல்லிபுரம், சின்னத்தொண்டி, குளத்துார், முகிழ்த்தகம், நம்புதாளை, மயிலாடுவயல் ஆகிய கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடிகள் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திகடன் நிறைவு செய்தனர். மதியம் அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.