உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி பாதுகாப்பு பணியில் 125 தீயணைப்பு வீரர்கள்

சதுரகிரி பாதுகாப்பு பணியில் 125 தீயணைப்பு வீரர்கள்

விருதுநகர்: “சதுரகிரி மலை பாதுகாப்பு பணியில் 125 தீயணைப்பு துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் ,”என ,விருதுநகர் தீயணைப்பு துறை அலுவலர் சுப்பிரமணி கூறினார். அவர் கூறியதாவது: சதுரகிரி மலை கோயில் ஆடி அமாவாசை விழாவை யொட்டி நாளை முதல் 4 வரை தீயணைப்பு துறையினர் தாணிப்பாறை, வாழை தோப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் தாணிப்பாறை பகுதியில் 5 தீயணைப்பு வாகனங்கள், வாழைதோப்பு பகுதியில் 2 வாகனங்கள் நிறுத்தப்படும். ஒரு வாகனத்தில் 14 பேர் வீதம் 98 பேர் உட்பட 120 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 30 பேர் மலைப்பகுதியில் மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர். இவர்கள் ,தாணிப்பாறையில் மலையடிவாரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அபாயகரமான மலை பகுதியில் ஏறுபவர்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர். மலை பகுதியில் மழை பெய்தால் மலையேறுவது நிறுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !