ஷீரடி சாய்பாபா கோவிலில் பல்லக்கு ஊர்வலம்
ADDED :3402 days ago
பெ.நா.பாளையம்: நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷீண ஷீரடி சாய்பாபா கோவிலில் புதிய பல்லக்கு ஊர்வலம் நாளை நடக்கிறது. சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். அதுபோல இக்கோவிலிலும் வியாழன்தோறும் பல்லக்கு ஊர்வலம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் ஊர்வலம் நாளை மாலை, 7:00 மணிக்கு நடக்கிறது. இதில், பாபா பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மறுநாள் இக்கோவிலில் காலை. 7:00 மணிக்கு கணபதி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகிய நடக்கின்றன. காலை, 9:30 மணிக்கு தத்தாத்ரேயர் சிலை பிரதிஷ்டை மற்றும், 108 சங்காபிஷேகம் ஆகியன நடக்கிறது.