சீரடி சக்தி சாய்பாபா கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ADDED :3402 days ago
விழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள சீரடி சக்தி சாய்பாபா கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகர் சக்தி விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், விஷ்ணுதுர்க்கை, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள் மற்றும் சீரடி சக்தி சாய்பாபா கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை, முதற்கால பூர்ணாஹூதி நடந்தது. பின், மாலை 4:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை ஆரம்பம், வேதிகா அர்ச்சனை, கலசம் புறப்பாடு, பரிவார மூர்த்திகள் மற்றும் சீரடி சக்தி சாய்பாபாவிற்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது.