அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பைரவர் வழிபாடு
ADDED :3403 days ago
செஞ்சி: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பைரவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு 8 மணிக்கு மகா தீபாராதனையும் பக்தர்களுக்கு பி ரசாத வினியோகமும் நடந்தது. இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழவினர் கலந்து கொண்டனர்.