உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்முடிசோழகன் கோவிலில் செடல்

மும்முடிசோழகன் கோவிலில் செடல்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் செடல் மாரியம்மன் கோவிலில், நாளை (29ம் தேதி) செடல் மற்றும் சாகை வார்த்தல் திருவிழா  நடக்கிறது. செடல் திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி, காலை 9:00 மணியளவில் அபிஷேக ஆராதனை,  இரவு 7:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, தொடர்ந்து, காத்தவராயன் கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்து வந்தன.  நாளை (29ம்  தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணியளவில் காவடி, செடல் உற்சவம், மாலை 3:00 மணியளவில் சாகை வார்த்தல்  நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !