உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜா கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா

ராஜா கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா

ஈரோடு: ஈரோடு, ராஜா கருப்பண்ணசாமி கோவிலில் நடந்த, ஆடி விழாவில் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு ராஜாக்காடு முதல் வீதியில், ராஜா கருப்பண்ணசாமி கோவிலில், ஆடி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம், மாலையில் காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. இரண்டாம் நாளான நேற்று காலை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அதையடுத்து அபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்சிகால பூஜை, இரவு மறுபூஜை நடந்தது. மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் ராஜா கருப்பண்ணசாமி கோவில் விழாவில், சூரம்பட்டி, எஸ்.கே.சி.ரோடு, பெரியார் நகர், கைகோளன் தோட்டம் உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானப் பொதுமக்கள், தீர்த்தம் எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !