கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆக., 2ல் குருப்பெயர்ச்சி
ADDED :3403 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, வரும், 31ம் தேதி காலை, 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, நவக்கிரஹ அபிஷேகம், சங்கல்பம், லட்சார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து, ஆகஸ்ட், 1ம் தேதி காலை, 9 மணிக்கு நவக்கிரக அபிஷேகம், லட்சார்ச்சனையும், 2ம் தேதி காலை, 7 மணிக்கு நவக்கிரக மூர்த்திகளுக்கும், குருபகவானுக்கும் மூலமந்திரயாகம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், காலை, 9.30 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, மகா தீபாராதனை நடக்கிறது.