ராமேஸ்வரம் கோயிலில் ஆடிவிழா: தங்க பல்லக்கில் அம்மன் வீதியுலா!
ADDED :3403 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. நேற்று நடந்த இரண்டாவது நாள் விழாவில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளினார். வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசித்தனர். இரவு அனுப்பு மண்டபத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன தங்க காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,7ல் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்துள்ளார்.