உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு!

திருப்பூர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு!

திருப்பூர்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்  நடந்தன. ஆடிமாத கிருத்திகை முரு கனுக்கு மிகவும் உகந்தது. நேற்று, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சு ப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்களி கயித்தமலை கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்÷ கஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருமால் மருகனுக்கு,   பால், பன்னீர், தேன், தினை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு  திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  சிறப்பு அலங்காரம், மகா  தீபாரதனை நடந்தது. மாலை, மயில் வாகனத்தில், சுவாமி திருவீதியுலா காட்சியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !