கவீஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
ADDED :3403 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கோஆப்ரேடிவ் காலனியில் சக்தி விநாயகர் மற்றும் கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 34ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா நேற்று முன் தினம் மாலை துவங்கியது. பாலசுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திரு க்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. அர்ச்சகர்கள் ரகுநாதன், சம்பத்குமார் ஆகியோர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். நேற்று காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பின், சுவாமி திருவீதி உலா நடந்தது.