உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் பக்தர்கள் நேர்த்தி கடன்

செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் பக்தர்கள் நேர்த்தி கடன்

செஞ்சி: செஞ்சியில் ஆடி கிருத் திகையை முன்னிட்டு பக்தர்கள் வேன், லாரியை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி பி.  ஏரிக்கரை சுப்பி ரமணியர் கோவிலில் 44வது ஆண்டாக ஒழுங்குமுறை விற்பனை கூட நெல், அரிசி, மணிலா  வியாபாரிகள் மற்றும்  எடை பணி தொழிலாளர்கள்  சார்பில் ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு மாரியம்மன்  கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக  எடுத்து வந்தனர். தொடர்ந்து, அக்னி  சட்டி ஊர்வலம், சக்திவேலுக்கு 108 திரவிய  அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பக்தர்களுக்கு  மிளகாய் அபிஷேகம், எண்ணெய் சட்டியில் வடை எடுத்தல், மார்பு மீது மாவு  இடித்தல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து 3:00 மணிக்கு செடல் போட்டு   ஆகாய மார்கமாக சாமிக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து தீ  மிதித்தனர். செடல் அணிந்த பக்தர்கள் லாரி, வேன், ஆட்டோ, கார், பொக்லைன் ஆகி யவற்றை தேராக இழுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !