மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED :3560 days ago
விழுப்புரம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், ஆடிக் கிருத்திகை விழா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி தலைமையிலான நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.