சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :3402 days ago
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி 2ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலு த்தினர். விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று ஆடி இரண்டம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும்; வயிற்றில் மாவிளக்கிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.