எல்லை காளி கோவிலில் செடல் திருவிழா
ADDED :3402 days ago
கடலுார்: வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். கடலுார், பழைய வண்டிப்பாளையம், காளவாய் தெருவில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், தொடர்ந்து, 1,008 குடம் நீர் அபி÷ ஷகம், மகா தீபாராதனை, சாகை வார்த்தலும், மாலை செடல் உற்சவமும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.