கொம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :3402 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டையை அடுத்த கொம்பாக்கம் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் 39வது செடல் உற்சவ திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கும்பம் கொட்டி பூஜை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நடந்தது. அலகு குத்தியும், கனரக வாகனங்களை இழுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் சாமி தரிசனம் செய்த னர். இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.